7 Best Video Editing Tips For Beginners

Video Editing கற்றுக்கொள்ள ஆர்வம் அதிகமாக உள்ளதா அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

முதலில் Video Editing கற்றுக் கொள்வதற்கு என்னென்ன குறிப்புகளை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவில் தெளிவாக பார்க்கப் போகிறோம்.

நான் ஆரம்பத்தில் Video Editing கற்றுக்கொண்ட போது என்னென்ன பின்பற்றினேன் என்பதை தான் உங்களுக்கு தெளிவாக கூற போகிறேன்.எனவே இந்த பதிவை முழுமையாகப் படியுங்கள். நீங்களும் சுலபமாக வீடியோக்களை Edit செய்யலாம்.

1.Choose The Right Software

உங்கள் Video Editing திறனை அதிகரிக்க நீங்கள் சரியான Video Editing Software தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில் நீங்கள் Select செய்யும் மென்பொருளை பொறுத்துதான் உங்கள் வீடியோவின் தரம் இருக்கும்.

எனவே உங்களால் எவ்வளவு மதிப்புள்ள மென்பொருளை காசு கொடுத்து வாங்க முடியும் என்பதை தீர்மானித்து Video Editing Software தேர்ந்தெடுக்கவும்.

குறைந்த விலையில் அதிக வசதிகளுடைய 3 Video Editing Software பற்றி தெளிவாக பார்ப்போம்.

Best Video Editing Softwares For Beginners

1.Techmisth Camtasia

நீங்கள் Online Course அல்லது உங்கள் Brand-ற்கு வீடியோக்களை Edit செய்ய விரும்புகிறீர்களா? அப்படியென்றால்   இந்த Camtasia Software உங்களுக்கு சரியானதாக இருக்கும்.

கம்ப்யூட்டரில் முதன்முதலாக Video Editing கற்றுக் கொள்பவர்களுக்கு இந்த Software மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.ஏனெனில் இதன் வடிவமைப்பு மிகவும் எளிமையாக கொடுக்கப்பட்டுள்ளது.

நீங்கள் Youtube Channel அல்லது Online Course வீடியோக்களை உருவாக்க விரும்பினால் HD Screen Recording இதில் எளிமையாக செய்து கொள்ள முடியும்.

Video மற்றும் Audio Quality மிகவும் தரமாக இருக்கும். எனவே Screen Record செய்ய ஒரு சிறந்த Software தேவையென்றால் கண்டிப்பாக Techsmith Camtasia தேர்ந்தெடுக்கலாம்.

குறைவான RAM மற்றும் Processor கொண்ட கணினிகளில் இந்த மென்பொருளை பயன்படுத்த முடியும் இதற்கு அதிக Specification கொண்ட  Computer தேவைப்படாது.

நான் ஆரம்பத்தில் Government Laptop பயன்படுத்தி Camtasia-வில் தான் Video Editing கற்றுக்கொண்டேன்.நீங்கள் மொபைலில் வீடியோக்களை எடுத்து நன்றாக Colour Correction  செய்ய வேண்டுமென்றால் கண்டிப்பாக Camtasia தேர்ந்தெடுக்க வேண்டாம்.

ஏனெனில் இதில் Colour Correction Options அதிகமாக கொடுக்கப்படவில்லை.எனவே Colour Grade  நீங்கள் நன்றாக கற்றுக் கொள்ள வேண்டுமென்றால் Adobe Premier Pro தேர்ந்தெடுக்கவும்.

Features Of Camtasia

  • Screen Recorders
  • Audio Effects
  • Visual effects
  • Animations
  • Transitions
  • Voice Narrations
  • Annotations
  • Web-cam

புதிதாக Video Editing கற்றுக்கொள்பவர்களுக்கு  இந்த மென்பொருள் சரியானதாக இருக்கும்.

2.WonderShare Filmora

Wondershare Fimora குறைந்த விலையில் மிகவும் அதிகமான வசதி கொண்டுள்ள ஒரு சிறந்த வீடியோ Video Edititng Software ஆகும்.தற்போது நிறைய நண்பர்கள் இந்த மென்பொருளை பயன்படுத்தி தான் Youtube Videos Edit செய்கின்றனர்.

நீங்கள் Youtuber-ஆக இருந்தால் கண்டிப்பாக Wondershare Filmora தேர்ந்தெடுக்கலாம். ஏனெனில் இதில் உங்களுக்கு Color Correction Options நிறைய கொடுக்கப்பட்டுள்ளது.

நீங்கள் HD மற்றும் 4K வீடியோக்களை Edit செய்ய விரும்பினால் உங்கள் Computer-ன் RAM 4GB இருந்தாலே போதும் நீங்கள் எளிமையாக அதிக தரத்துடன் வீடியோக்களை Edit செய்து கொள்ள முடியும்.

இதில் மிக முக்கிய வசதி என்னவென்றால் உங்கள் மொபைலில் எடுக்கும் வீடியோ அனைத்திற்கும்  சிறப்பாக Colour Correction செய்ய முடியும்.

Features Of Wondershare Filmora

  • 4K Resolution Editing Support
  • Screen Recording
  • Audio Mixer
  • Tilt-Shift
  • Social Import
  • Speed Control
  • Video Stabilization
  • Colour Grading Presets
  • Split Screen
  • Frame By Frame Preview

எனவே மொபைலில் வீடியோ எடுத்து Youtube-ல் Video Upload செய்யும் நண்பர்களுக்கு Wondershare Filmora மிகவும் சரியான Video Editing Softwareர-ஆக இருக்கும்.

3.Adobe Premier Pro

உங்களுக்கு Basic Video Editing தெரியும் இன்னும் Professional-ஆக நீங்கள் வீடியோ Editing கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் Adobe Premier Pro தேர்ந்தெடுக்கலாம்.

இந்த மென்பொருளை Windows மற்றும் MAC இரண்டிலும் பயன்படுத்தலாம்

Adobe Premier Pro Software பயன்படுத்தி நீங்கள் 4K,8K போன்ற அதிக Quality உள்ள வீடியோக்களை Edit செய்ய முடியும்.அதுமட்டுமல்லாமல் Tv Shows மற்றும் Movies ஆகியவை இந்த இந்த மென்பொருளில் தான் Edit செய்யப்படுகின்றன.

உங்கள் Computer Perfomance அதிகமாக இருந்தால் மட்டுமே இந்த மென்பொருளை தேர்ந்தெடுக்கவும். இல்லையென்றால் இந்த மென்பொருள் உங்கள் Computer-ல் Lag ஆகும்.

Features Of Adobe Premier Pro

  • Shared Projects
  • Direct Publishing
  • VR Editing
  • VR Audio Editing
  • Type Tool
  • Lumetric Support
  • Libraries
  • Video Titling & Graphics
  • Multiple Video Types

நீங்கள் Video Editing பற்றி நன்றாக கற்றுக்கொள்ள வேண்டும் நான் Prefessional Video Editor ஆக வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் Adobe Premier Pro தேர்ந்தெடுப்பது மிகவும் சிறந்தது.

2.Select The Right Computer

நீங்கள் Video Editing கற்றுக்கொள்ள Windows மற்றும் Mac போன்ற எது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

ஆனால் வேகமாக வீடியோ Editing செய்ய வேண்டும் மற்றும் நிறைய Video Editing பற்றி கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் கண்டிப்பாக SSD (Solid State Drives) கொண்ட Computer தேர்ந்தெடுக்க வேண்டும்.

அப்போதுதான் நீங்கள் 4K Video Edit செய்தாலும் உங்களுடைய Computer Lag ஆகாது மிகவும் வேகமாக வேலை செய்யும்.

இரண்டாவதாக உங்கள் Computer-ல் RAM (Random Access Memory)  அதிகமாக இருக்குமாறு தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் கம்ப்யூட்டரின் வேகம் RAM பொருத்துதான் இருக்கும்.

நீங்கள் Video-களை Edit செய்யும் போது Preview தெளிவாக பார்க்க வேண்டுமென்றால் நல்ல Graphics Card உங்களுடைய கணினிக்கு தேர்ந்தெடுக்கவேண்டும்.

குறிப்பு: நீங்கள் என்னதான் அதிக விலைமதிப்புள்ள Computer பயன்படுத்தினாலும் சரி உங்கள் Knowledge பொறுத்துதான் Video Editing செய்ய முடியும். எனவே Video Edit செய்ய நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் அறிந்து வீடியோக்களை சிறப்பாக Edit செய்ய துவங்குங்கள்.

3.Learn Keyboard Shortcuts

வீடியோ Editing வேகத்தை அதிகரிக்க Keyboard Shortcut கற்றுக் கொள்வது மிகவும் அவசியம். ஏனெனில் நீங்கள் ஒவ்வொரு முறையும் Mouse பயன்படுத்தி Editing செய்ய முடியாது. இப்படி செய்தால் வீடியோ Editing நேரம் உங்களுக்கு அதிகரிக்கும்.

எனவே நீங்கள் பயன்படுத்தும் Video Editing Software பற்றிய Shortcut அனைத்தையும் கற்றுக்கொண்டு வீடியோ Edit செய்தால் உங்களின் நேரம் மிச்சமாகும்.

4.Add Text And Graphics

நீங்கள் Edit செய்யும் Video தனித்துவமாக தெரிய வேண்டுமென்றால் Text மற்றும் Graphics உங்களது வீடியோவில் Add செய்ய வேண்டும்.

உதாரணமாக நீங்கள் வீடியோவில் ஏதோ ஒன்றை பற்றி கூறுகிறீர்கள் என்றால் அதனை பற்றிய Graphics Video- வை  உங்களது வீடியோவில் இணைக்கலாம் இப்படி செய்யும் பொழுது உங்களது வீடியோ பார்ப்பவர்களுக்கு மிகவும் தனித்துவமாக இருக்கும்.

5.Choose Perfect Music

நீங்கள் எவ்வளவு நேரம் வீடியோக்களை Edit செய்கிறீர்களோ அதைவிட இரண்டு மடங்கு நேரம் செலுத்தி உங்கள் வீடியோவிற்கு Music தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஏனெனில் உங்கள் வீடியோவிற்கு நீங்கள் பொருத்தம் Music-ஐ பொறுத்துதான் உங்கள் வீடியோவின் Quality இருக்கும்.

எனவே Music என்பது ஒரு வீடியோவிற்கு மிக மிக முக்கியம் இவற்றை நீங்கள் பொறுமையாக தேடி சரியான இடத்தில் பயன்படுத்துவதன் மூலம் உங்களது Video-வின்  Quality- ஐ  உயர்த்தலாம்.

உதாரணமாக நீங்கள் Youtube Videos Edit செய்கிறீர்கள் என்றால் Youtube நிறுவனம் உங்களுக்கு இலவசமாக Music அளிக்கின்றது.

அதனை பயன்படுத்தி உங்கள் வீடியோக்களுக்கு Music Add செய்து கொள்ளலாம்.

6.Colour Correction And  Grading

உங்கள் வீடியோவின் அழகை கூட்டுவதற்கு இந்த Colour Correction பயன்படுகிறது. Colour Grade பயன்படுத்தி உங்கள் மொபைலில் எடுத்த வீடியோவாக இருந்தாலும் அழகாக காண்பிக்க முடியும்.

எனவே உங்களுடைய பார்வையாளர்களுக்கு உங்களுடைய வீடியோ அழகாக தெரிய Colour Correction Perfect-ஆக செய்ய வேண்டும்.

நீங்கள் Colour Grade நன்றாக செய்ய வேண்டுமென்றால் Adobe Premier Pro மென்பொருளை பயன்படுத்தி எளிமையாக செய்யலாம்.

7.Export Perfect Quality

வீடியோவை முழுமையாக Edit செய்த முடித்த பிறகு சரியான Quality-ல் Export செய்ய வேண்டும். அதாவது நீங்கள் எதற்காக வீடியோவை Edit செய்தீர்களோ அதற்கு தகுந்த Format-ல் வீடியோவை Export செய்துகொள்ளுங்கள்.

மிக முக்கியமான Social Media Video Formats கீழே உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Social Media NameVideo Size (Pixels)
Facebook1200×720
Instagram600×750
Twitter1280×1024
Snapchat1080×1920
Youtube1920×1080
LinkedIn4096×2304 (Max)
Pinterest600×900

Read Also: Change Ligt And Dark Theme In Adobe Photoshop CC

Conclusion

இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள அனைத்தும் நான் Video Editing கற்றுக்கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

நீங்களும் Video Editing கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் மேற்கண்ட குறிப்புகளை நன்றாக தெரிந்து கொண்டு வீடியோக்களை Edit செய்ய துவங்குங்கள்.

எனக்கு தெரிந்தவற்றை உங்களிடம் பகிர்ந்து கொண்டேன். உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும் .மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment Section-ல் பதிவிடவும்.

Spread The Love

Leave a Comment